மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Coronavirus confirmed to O. Raja, brother of Deputy Chief Minister O. Pannirselvam

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை, 

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5,48,318 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16,475 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் இதுவரை 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க மாநில அரசு பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.