மாநில செய்திகள்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் + "||" + Thasildhar Senturrajan has been appointed in charge of the Sathankulam police station

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி,

சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட்டுக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்காததால் சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும், மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு இடையூறாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. 

ஐகோர்ட்டு கிளை உத்தரவையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறைக்கு அனுப்பிவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான போலீசார் 4 பேரையும் வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
3. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி-யின் முதல் தகவல் அறிக்கை தாக்கல்
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
4. வியாபாரி-மகன் சாவு:சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்து போன விவகாரத்தில் தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார் அளித்துள்ளார்.