ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்" -மாஜிஸ்திரேட் அறிக்கையில் தகவல்


ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்  -மாஜிஸ்திரேட் அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2020 8:14 AM GMT (Updated: 30 Jun 2020 8:14 AM GMT)

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்" என்று மாஜிஸ்திரேட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர் என்று  மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டு அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- "லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன - அவற்றை அழிக்க நேரிடும். 

நீண்ட நேரம் கழித்து குமார் என்பவர் சக ஊழியர்களை ஒருமையில் பேசி அதட்டும் தொனியில் குறிப்பேடுகளை கேட்டார். அன்று ஒரு மணி அளவில் தான் என்னால் விசாரணையை தொடக்க முடிந்தது.  19.6.2000 முதல் எவ்வித காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை .

எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அந்தந்த தினம் தானாகவே அழிந்து போகும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story