வருகிற 15-ந்தேதி கடைசிநாள்: நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான மையங்களை மாற்றிக்கொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை தகவல்


வருகிற 15-ந்தேதி கடைசிநாள்: நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான மையங்களை மாற்றிக்கொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை தகவல்
x
தினத்தந்தி 5 July 2020 7:06 AM IST (Updated: 5 July 2020 7:06 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 15-ந்தேதி கடைசிநாள்: நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான மையங்களை மாற்றிக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வும், ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை காலை, மதியம் என 2 கட்டங்களாக தேர்வு நடக்க உள்ளது. 

இந்த தேர்வை எழுத உள்ளவர்கள் தங்களுடைய தேர்வு மையங்களை மாற்றிக்கொள்வதற்கு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள வருகிற 15-ந்தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வுமையங்களை மாற்றிக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story