தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு + "||" + Some places in Tamil Nadu Chances of showers today Meteorological Department Announcement
தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் பருவகாற்று மற்றும் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘தேவாலா, சின்னக்கல்லாறு, வால்பாறை, கலசப்பாக்கம் தலா 4 செ.மீ., திருப்பத்தூர், அரிமளம், சோலையாறு, சின்கோனா, செய்யூர் தலா 3 செ.மீ., நாகர்கோவில், செங்கல்பட்டு, மாமல்லபுரம் தலா 2 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.