முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்!
மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.
மதுரை
தேமுதிக தலைவர் விஜய காந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தர் ராஜன். 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ. ஆக தேர்வானார்.
கட்சியின் பொருளாளராகவும் இருந்த அவர் சில ஆண்டுகளில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. ஆக மாறி அக்கட்சியில் இணைந்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, சீட் கிடைக்கவில்லை.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார்.
Related Tags :
Next Story