மாநில செய்திகள்

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...?-அமைச்சர் ஓ.எஸ்.மணியன் + "||" + After Sasikala comes out of prison Who will lead the AIADMK ...? Minister O. S. Maniyan

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...?-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...?-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்
நாகை

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்நிலைப்பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா விடுதலைக்கு பிறகு யார் அதிமுகவை வழிநடத்துவார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ”சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரணமான மாவட்ட செயலாளர் என்றும் இதில் எந்த கருத்து கூறமுடியாது” என்றும் தெரிவித்தார்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புபவர்கள் ஒளிந்துகொண்டு இருக்காமல், தங்களை தனிமைப்படுத்திகொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.