சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரையும் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவு


சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரையும் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2020 5:49 PM IST (Updated: 13 July 2020 5:49 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரையும் நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

சிபிஐ மனு மீது மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி,  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஐந்து பேரையும் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். சிபிஐ தாக்கல் செய்த மனு நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.


Next Story