தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்கள் கவனத்திற்கு...
12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவியர் 94.30 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை
தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 7,79,931 எழுதினர்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.94.80 சதவீத மாணவிகள், 89.41 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர் மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.அதில், மாணவிகள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
வரும் 27ஆம் தேதி தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மொத்தமாக பின்னர் அறிவிக்கப்படும்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
2வது இடம்: ஈரோடு - 96.99%
3வது இடம்: கோவை - 96.39%
அதிகபட்சமாக கணினி பாடப்பிரிவில் 99.51% பேரும், கணிதப் பாடப்பிரிவில் 96.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடப் பிரிவில் 96.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
Related Tags :
Next Story