கந்த சஷ்டி வீடியோ விவகாரத்தில் "கறுப்பர் கூட்டம்" சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்


கந்த சஷ்டி வீடியோ விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்
x
தினத்தந்தி 16 July 2020 3:22 PM IST (Updated: 16 July 2020 3:22 PM IST)
t-max-icont-min-icon

கறுப்பர் கூட்டம் யு டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

புதுச்சேரி,

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இது தொடர்பாக  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை  சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

Next Story