செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 12:28 PM IST (Updated: 20 July 2020 12:28 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி,நெல்லை, தூத்துக்குடி  போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 253 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 9,917 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.

Next Story