செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும்  340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 21 July 2020 1:30 PM IST (Updated: 21 July 2020 1:30 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும்  340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10,367 ஆக உயர்ந்து உள்ளது. 

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,276 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,546 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story