தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன
தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது. அதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளையும், பரிசோதனை கருவிகளையும் அமைத்துக்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் ஆர்டர் செய்தது.
இந்நிலையில் நேற்று இரவு மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. புதிதாக கருவிகள் வந்திருப்பதால் பரிசோதனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா பரிசோதனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில், தற்போது மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story