மாநில செய்திகள்

துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு 27 பேர் தேர்வு - பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார் + "||" + Selection of 27 persons for the post of Deputy Collector - Chief Minister issued the appointment order

துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு 27 பேர் தேர்வு - பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்

துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு 27 பேர் தேர்வு - பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்
துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 27 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார்
சென்னை,

2016-2019 ஆம் ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 27 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் இன்று இதற்கான நிகழ்வு நடைபெற்றது. பணிநியமன ஆணையை பெற வந்தவர்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தங்களது நியமன ஆணையை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியின் போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.