என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை நாளை முதல் பதிவேற்றம் செய்யலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை நாளை முதல் பதிவேற்றம் செய்யலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 29 July 2020 6:54 PM GMT (Updated: 29 July 2020 6:54 PM GMT)

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான சான்றிதழ்களை நாளை முதல் பதிவேற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 8 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

31-ந்தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு 2 நாட்களுக்கும் 20 ஆயிரம் பேர் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தையோ அல்லது 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story