டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசும் குறைக்க முயற்சிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்


டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசும் குறைக்க முயற்சிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 July 2020 10:19 AM GMT (Updated: 30 July 2020 10:19 AM GMT)

டெல்லி அரசு போன்று தமிழக அரசும் டீசல் மீதான வாட் வரி குறைக்க முயற்சிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

டீசல் மீதான #வாட் ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு. தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும்.

மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும் என அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story