மாநில செய்திகள்

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, நடிகை குஷ்பூ ஆதரவு ; தமிழக காங்கிரஸ் கண்டனம் + "||" + Actress Khushboo supports new national education policy Tamil Nadu Congress condemned

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, நடிகை குஷ்பூ ஆதரவு ; தமிழக காங்கிரஸ் கண்டனம்

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, நடிகை குஷ்பூ ஆதரவு  ; தமிழக காங்கிரஸ் கண்டனம்
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு,ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பூவுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
சென்னை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார். 

34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை செய்து  மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கை திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அன்புமணி எம்.பி. உள்ளிட்டோர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது என குஷ்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது  ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். 

காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு;கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை.

ஒழுக்கமின்மை விரக்தியிலிருந்து வருகிறது. குணப்படுத்த யோகா சிறந்த மருந்து. என கூறி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு: பா.ஜனதாவுக்கு தாவலா...? குஷ்பூ காட்டமான பதில்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார் . இதுகுறித்து பா.ஜனதாவுக்கு தாவலா...? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நிலையில் குஷ்பூ ஆவேசமாக பதில் அளித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...