செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 360 people were confirmed to have corona infection in Chengalpattu today
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி,நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14,557 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் 10,480 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3,471 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை மாவட்டத்தில் 246 பேர் உயிரிந்துள்ளனர்.
மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.