‘மண்ணையும், ஆறுகளையும் காப்பாற்ற வேண்டும்’ ஆடிப்பெருக்கையொட்டி ஜக்கி வாசுதேவ் வாழ்த்து


‘மண்ணையும், ஆறுகளையும் காப்பாற்ற வேண்டும்’ ஆடிப்பெருக்கையொட்டி ஜக்கி வாசுதேவ் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Aug 2020 12:47 AM GMT (Updated: 2 Aug 2020 12:47 AM GMT)

ஆடிப்பெருக்கையொட்டி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நம் தமிழ் கலாசாரத்தில் ஆடிப்பெருக்கு என்பது மிகவும் முக்கியமான நாளாகும். இது மழை, நீர் மற்றும் மண்ணுடன் தொடர்புடைய விழாவாக கொண்டாடப்படுகிறது. இப்போது ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கிப் பாயும் நேரம். இந்த ஆண்டு நன்றாக மழை பெய்துள்ளது. ஆறுகள் முழுமையாக ஓடுகின்றன. ஆனால், இந்த ஆறுகள் எப்போதும் இப்படியே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

நம் கலாசாரத்தையும் விவசாயத்தையும் ஆரோக்கியத்தையும் பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல நம் மண்ணையும், ஆறுகளையும் காப்பாற்ற வேண்டும். இந்த நோக்கத்திற்காக தான் ‘காவிரிக்கூக்குரல்’ இயக்கம் செயல்பட்டு வருகிறது. காவிரி நதி படுகைகளில் இருக்கும் விவசாயிகள் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களை நட உள்ளனர். இந்தப்பணியில் உங்களால் எந்தளவுக்கு முடியுமோ, அந்தளவுக்கு ஈடுபட வேண்டும். குறிப்பாக தமிழக இளைஞர்கள் மாதம் ஒரு நாளாவது கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story