10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 10 Aug 2020 5:02 AM GMT (Updated: 10 Aug 2020 5:02 AM GMT)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை,

 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்தான நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:30 மணிக்கு வெளியானது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது,

மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 17 முதல் 21 ஆம் தேதி வரை, பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story