சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு


சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 2:15 PM GMT (Updated: 10 Aug 2020 2:23 PM GMT)

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழகசுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 5,879, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 35 பேர் உட்பட 5,914 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 53,099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,96,901 லிருந்து 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 4-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,09,123இருந்து 1,10,121 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 6,037 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,38,638-ல் இருந்து 2,44,675 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 114 பேர் இன்று உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 80 பேர், தனியார் மருத்துவமனைகளில் 32 பேர் இன்று உயிரிழந்தனர். தமிழகத்தில் 8-வது நாளாக கொரோனா உயிரிழப்பு 100-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வேறுநோய் பாதிப்பு இல்லாத 9 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 1,106 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,327 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 2,714 பேர் உயிரிழந்தனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் 3,083 பேர் உயிரிழந்தனர்.

65,141 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,96,901லிருந்து 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1,82,779 ஆண்கள், 1,20,007  பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 53,099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story