மாநில செய்திகள்

கனிமொழியிடம் இந்தியரா? என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை + "||" + CISF orders enquiry after officer questions DMK leader Kanimozhi's nationality

கனிமொழியிடம் இந்தியரா? என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை

கனிமொழியிடம் இந்தியரா? என கேட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீசிடம் அதிகாரிகள் விசாரணை
பெண் போலீசுக்கு விமான நிலையத்தில் பணி எதுவும் வழங்காமல் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
ஆலந்தூர், 

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பகுதியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஒருவர், இந்தியில் ஏதோ கூறினார். உடனே கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார். அப்போது பெண் போலீஸ், இந்தி தெரியாமல் இந்தியரா? என்று கேட்டதாக கனிமொழி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று அந்த பெண் போலீசுக்கு விமான நிலையத்தில் பணி எதுவும் வழங்காமல் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முழுமையான விசாரணைக்கு பிறகு இதுபற்றி அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தூண்டில் வளைவு அமைப்பது குறித்துமணப்பாடு கடலில் படகில் சென்று கனிமொழி எம்.பி ஆய்வு
தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மணப்பாடு கடலில் நேற்று படகில் சென்று கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.
2. பிரணாப் முகர்ஜி மறைவு - இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு - கனிமொழி, திமுக எம்.பி.
பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
3. பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலினை: பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - திமுக எம்.பி.,கனிமொழி
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று திமுக எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.
4. ‘நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது’ கனிமொழி எம்.பி.பேட்டி
இதுவரை யாருக்கும் நான் மொழியாக்கம் செய்ததே கிடையாது என கனிமொழி எம்.பி. கூறினார்.
5. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்து போன விவகாரத்தில் தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார் அளித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...