தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்


தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Aug 2020 4:31 AM GMT (Updated: 12 Aug 2020 4:31 AM GMT)

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அரசின் அனுமதி பெற்று பயணிக்கும் வகையிலான இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இருப்பினும் இ-பாஸ் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக பொதுமக்கள் பெறும் பாதிப்புக்கு உள்ளாவதால், இதனை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலர் அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் லஞ்சம் கொடுத்து இ-பாஸ் வாங்கும் நடைமுறை பல இடங்களில் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இல்லை என குறிப்பிட்டு மக்களின் சிரமத்தை கருதி இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story