தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல்


தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 19 Aug 2020 5:27 PM GMT (Updated: 19 Aug 2020 5:27 PM GMT)

தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே துரைமுத்துவுடன் பதுங்கி இருந்த கூட்டாளிகளான சாமிநாதன், சிவராம லிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணு ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 3 பேருக்கும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story