மாநில செய்திகள்

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி + "||" + Sonia Gandhi should continue as leader of Congress party - KS Alagiri

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி, கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

இந்த நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தியின் ராஜினாமா ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய காங்கிரஸ் தலைவர் நாளையே தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எஸ்.அழகிரி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும்.கோடிக்கணக்கான இந்திய மக்களும்,காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிரார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்- காங். ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங். ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
2. திருப்பதி தொகுதி எம்.பி. கொரோனாவுக்கு பலி- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருப்பதி தொகுதி எம்.பி. துர்காபிரசாத் ராவ் கொரோனாவுக்கு பலியானார்.
3. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் எனத்தகவல்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது: காங்கிரஸ்
சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
5. வலுவான தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சிதான் நாட்டை காப்பாற்றும் : பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பாஜகவை தோற்கடிக்க இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து வலுவான தலைமையே சரி என்று பஞ்சாப் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.