மாநில செய்திகள்

கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + Chief Minister Palanisamy orders to open water from Kodumudiyaru dam

கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 

விவசாயப்பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக 28.8.2020 முதல் 25.11.2020 வரை விநாடிக்கு 50 க.அடி மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை, வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப்பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை