மாநில செய்திகள்

24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ்; முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வீடியோ வைரலானது + "||" + Student All pass with 24 arrears; The video thanking the CM went viral

24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ்; முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வீடியோ வைரலானது

24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ்; முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வீடியோ வைரலானது
24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ் என அறிந்ததில் முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை,

கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தான் கல்லூரி இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து ஆல் பாஸ் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.  இத்துடன் இல்லாமல் அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருக்கும் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவித்துள்ளார்.

திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  பொறியியல் மாணவரான சஞ்சய் 24 அரியர்ஸ் வைத்திருந்துள்ளார்.  இந்த நிலையில் முதல் அமைச்சரின் அறிவிப்பால் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மாணவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.