நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின்
நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் வரவேற்பை சமூக வலைத்தளங்களில் பெற்றது.
இந்நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story