கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் - திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி வலியுறுத்தல்


கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் - திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Sept 2020 1:36 PM IST (Updated: 16 Sept 2020 1:36 PM IST)
t-max-icont-min-icon

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்கள் போலியாக சேர்க்கப்பட்டு, நிதியுதவி பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் முதல்கட்டமாக, 13 மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய பொன்முடி இவ்வாறு தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும்பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, “பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கிசான் திட்ட முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதாது, சிபிஐ விசாரணை வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. 

Next Story