மாநில செய்திகள்

பா.ஜனதா பிரமுகர் தி.மு.க.வில் இணைந்தார் + "||" + The BJP leader joined the DMK

பா.ஜனதா பிரமுகர் தி.மு.க.வில் இணைந்தார்

பா.ஜனதா பிரமுகர் தி.மு.க.வில் இணைந்தார்
பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தி.மு.க.வில் இருந்தார்.
சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 6-வது வார்டு சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ்.தனுஷ்கோடி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார்.


இந்த நிகழ்வின்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., ஆர்.கே.நகர் பகுதி பொறுப்பாளர்கள் வெ.சுந்தரராஜன், எஸ்.ஜெபதாஸ்பாண்டியன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருது கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.