ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி


ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 1 Oct 2020 5:27 PM IST (Updated: 1 Oct 2020 5:27 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

ஹத்ராஸ் செல்லும் வழியில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடுக்க முயன்றபோது ராகுல்காந்தி நிலைதடுமாறி கிழே விழுந்தார்.

இந்தநிலையில் உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி எம்.பி. தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது. ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. உ.பி.யில் ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story