எந்திரத்தில் மாற்றம்: ரேஷன் கடைகளில் இன்று முதல் காலதாமதம் இன்றி பொருட்கள் வினியோகிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு


எந்திரத்தில் மாற்றம்: ரேஷன் கடைகளில் இன்று முதல் காலதாமதம் இன்றி பொருட்கள் வினியோகிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2020 9:30 PM GMT (Updated: 13 Oct 2020 8:36 PM GMT)

ரேஷன் கடைகளில் இன்று முதல் காலதாமதம் இன்றி பொருட்கள் வினியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது வினியோக திட்டத்தை சீரமைத்து, உரிய பயனாளிகளுக்கு உரிய முறையில் அவரவர்களுக்கான இன்றியமையா பண்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வண்ணம் உடற்கூறு முறையிலான சரிபார்ப்பு (பயோ மெட்ரிக் ஆதன்டிகேஷன்) ஒருங்கிணைந்த ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய புதிய நடைமுறையின் செயலாக்கத்தில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றியமையாப் பண்டங்கள் பெறுவதில் சிரமம், காலதாமதம் நேரிட்டது ஆய்வின் மூலம் அறியப்பட்டது. எனவே அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றியமையா பண்டங்களை எவ்வித சிரமமும் இன்றி பெற்றுச்செல்லும் வகையில் விற்பனை முனைய எந்திரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அது இன்று (புதன்கிழமை) முதல் செயலாக்கப்படும். இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் சிரமமின்றி பொருட்கள் பெற இயலும்.

மேற்குறிப்பிட்டுள்ள வசதி ரேஷன் அட்டைதாரர்களின் தற்போதைய சிரமத்தை குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடு என்பதனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக் கும் அத்தியாவசிய பொருட் கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story