எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரிய நிகழ்ச்சி: அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு


எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரிய நிகழ்ச்சி: அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Oct 2020 10:30 PM GMT (Updated: 15 Oct 2020 8:06 PM GMT)

எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரிய நிகழ்ச்சியி, அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

சேலம், 

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையத்தை சேர்ந்த கருப்பக் கவுண்டரின் மனைவியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாருமான தவுசாயம்மாள் கடந்த 12-ந்தேதி காலமானார். அவரது மூன்றாம் நாள் காரியம் (சாங்கியம்) நேற்று சிலுவம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்றது.

மயானத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் நடந்தே சென்று வந்தனர். முதல்- அமைச்சரின் அண்ணன் கே.கோவிந்தராஜூ காரியத்தை செய்தார். அதன் பின்பு அஸ்தி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ் ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Next Story