சென்னை, செங்கல்பட்டில் மழை
சென்னை மற்றும் செங்கல்பட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் வண்டலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story