மாநில செய்திகள்

வெங்காய விலை உயர்வு: வேளாண் சட்டங்களால் மேலும் விலை உயரும் - திமுக தலைவர் ஸ்டாலின் + "||" + Onion prices rise: Farm bills will push up prices - DMK leader Stalin

வெங்காய விலை உயர்வு: வேளாண் சட்டங்களால் மேலும் விலை உயரும் - திமுக தலைவர் ஸ்டாலின்

வெங்காய விலை உயர்வு: வேளாண் சட்டங்களால் மேலும் விலை உயரும் - திமுக தலைவர் ஸ்டாலின்
வேளான் சட்டங்களால் பதுக்கல் அதிகரித்து வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், நாளுக்கு நாள் வெங்காயம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வெங்காய விலையேற்றம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தி தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், வெங்காய விலை உயர்வால் தாய்மார்களும் கண்ணீர் விடுவதாக தெரிவித்துள்ளார்.

வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம் என்றும் அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகரித்து மேலும் விலை உயரும் நிலை ஏற்படும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 3 வேளாண் சட்டங்களால், 10 கோடி விவசாயிகளுக்கு பலன்; நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பேச்சு
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நமது நாடு வெற்றிகரமாக போராடி வருகிற தருணத்தில், பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது.