திருமணம் தடைபட்டு வந்ததால் விரக்தி 2-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை


திருமணம் தடைபட்டு வந்ததால் விரக்தி 2-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 Oct 2020 10:30 PM GMT (Updated: 30 Oct 2020 10:30 PM GMT)

சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, பி.காம் பட்டதாரியான இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் யாமினி (வயது 25). பி.காம் பட்டதாரியான இவர், அண்ணாசாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

தந்தை இறந்த நிலையில் தனது தாய் தாட்சாயிணியுடன் சொந்த வீட்டில் 2-வது மாடியில் வசித்து வந்தார். யாமினிக்கு கடந்த சில வருடங்களாக அவரது தாய், மாப்பிள்ளை பார்த்து வந்தார். ஆனால் எந்த வரனும் சரியாக அமையாமல் திருமணம் தடைபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் யாமினியிடம் அவரது தாய் தாட்சாயிணி மீண்டும் திருமணம் பற்றி பேசினார். திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்த நிலையில் மீண்டும் அதைபற்றி தாய் பேசுவதால் விரக்தி அடைந்த யாமினி, திடீரென 2-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த யாமினி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தலைமை செயலக காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story