கொஞ்சம் இருங்க, என் காதலன் வந்து என்னை அழைத்துச் செல்வார்..!" - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
நீலகிரியில் தாலி கட்டும் நேரத்தில் காதலன் வந்து தன்னை அழைத்துச்செல்வார் எனக்கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மட்டகண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த 29 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மட்டகண்டியில் உள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடக்க இருந்த நிலையில், இரு வீட்டாரும் அதில் கலந்து கொண்டனர்.
அப்போது தாலி கட்டும் நேரத்தில் மணமகள் பிரியதர்ஷினி திடீரென எழுந்து தன் காதலன் தன்னை வந்து அழைத்துச்செல்வார் என சத்தமாக கூறினார். இதனால், உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனாலும் விடாப்படியாக இருந்த மணப்பென் தனது காதலன் பார்த்திபன் வந்து தன்னை அழைத்துச்செல்வார் என விடாமல் கூறிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த விடீயோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
"கொஞ்சம் இருங்க, என் காதலன் வந்து என்னை அழைத்துச் செல்வார்..!" - தாலி கட்டும் நேரத்தில் தகராறு#Coonoor#MarriageIssuehttps://t.co/hCEGEn5sY2
— Thanthi TV (@ThanthiTV) October 31, 2020
Related Tags :
Next Story