மாநில செய்திகள்

திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் கைது + "||" + Went to Velayathirai in defiance of the ban at Thiruthani BJP leader L Murugan arrested

திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் கைது

திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் கைது
திருத்தணியில் தடையை மீறி வேல்யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக வேல் யாத்திரை தொடங்க உள்ள திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டு சென்ற தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர். அவருடன் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து பேருந்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி, பள்ளிப்பட்டில் வீட்டு மாடியில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வழிபாடு
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து ரம்ஜான் பண்டிகை தினத்தில் வீட்டு மாடியில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினார்கள்.
2. திருத்தணி, மதுரவாயல் தொகுதி வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
3. திருத்தணி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. திருத்தணியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்
திருத்தணியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. திருத்தணி அருகே பெற்றோர் கண்டித்ததால் மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்
திருத்தணி அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர் மாயமானார். 2 நாட்களுக்கு பிறகு அவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.