தமிழகத்தில் நவம்பர் மாதம் ரூ.7 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
தமிழகத்தில் நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.7 ஆயிரத்து 84 கோடி வசூலாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் மாதம் தோறும் அதிகரித்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.7 ஆயிரத்து 84 கோடி வசூலாகி உள்ளது. இது 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.6 ஆயிரத்து 449 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது கொரோனா காலத்திலும் பத்து சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் 13 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story