நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை; பொன்.ராதாகிருஷ்ணன் + "||" + BJP is not in the background of Actor Rajinikanth political party launch; Pon.Radhakrishnan
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை; பொன்.ராதாகிருஷ்ணன்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை என அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் செய்வது பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3ந்தேதி உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்றும் பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை உறுதி செய்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, ரஜினி கட்சி தொடங்குவது மகிழ்ச்சி. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லது என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை என கூறிய அவர், பா.ஜ.க. எப்போதுமே பின்னணியில் இருக்காது, முன்னணியில் தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன என கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.