கூட்டணி வேறு, கொள்கை வேறு: கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படுவோம்: முதல்வர் பழனிசாமி


கூட்டணி வேறு, கொள்கை வேறு: கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படுவோம்: முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 Dec 2020 2:07 PM GMT (Updated: 20 Dec 2020 2:07 PM GMT)

கூட்டணி வேறு, கொள்கை வேறு:கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற  கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பின்னர்  முதல்வர் பழனிசாமி பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது: - கூட்டணி வேறு, கொள்கை வேறு, நாங்கள் கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படுவோம். எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை. 

ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

Next Story