மாநில செய்திகள்

குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளோம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் + "||" + Three-day national immunisation drive for Polio will begin on January 17.

குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளோம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளோம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -  


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி. கொரோனா பரவ துவங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

குறுகிய காலத்தில், ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது சாதனை. அடுத்த சில நாட்களில், இந்த தடுப்பூசிகளை நம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். முதலில் சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 2ம் தேதி, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 மாவட்டங்களில் ஒத்திகை செய்யப்பட்டது. தற்போது, நாடு முழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது என கூறினார்.

ஜனவரி 17 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் போலியா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். போலியோவை விரட்டியது போல கொரோனாவையும் விரட்டுவோம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக அதிகரித்துள்ளது.
2. மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
3. ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. ஒருவருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 217-கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 217- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.