மாநில செய்திகள்

புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு குறைந்தது + "||" + Tamil Nadu reported 682 new COVID19 cases, 869 discharges, and 6 deaths in the last 24 hours

புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு குறைந்தது

புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு குறைந்தது
தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு குறைந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,26,943 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 201 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,228 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,07,744 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,971 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.