தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Jan 2021 12:45 PM GMT (Updated: 18 Jan 2021 12:45 PM GMT)

தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 31 ஆயிரத்து 323- ஆக உள்ளது. சென்னையில் இன்று 158- பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 758  ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,272- ஆக உள்ளது. 

Next Story