சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு


சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டம் - விமான போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2021 5:24 AM GMT (Updated: 22 Jan 2021 5:24 AM GMT)

சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக கடந்த 19ம் தேதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, தற்போது மழை தணிந்துள்ளது. மேலும் மழை நின்ற பிறகும் கடந்த சில தினங்களாக சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இந்த பனி மூட்டத்தால் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. பெங்களூருவில் இருந்து வந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.


Next Story