சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி


சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 24 Jan 2021 5:50 AM GMT (Updated: 24 Jan 2021 5:50 AM GMT)

சென்னையில் திடீரென அதிகரித்த பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக கடந்த 19ம் தேதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, தற்போது மழை தணிந்துள்ளது. 

இருப்பினும் சென்னையில் கடந்த சில நாட்களாகவே பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நேற்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. 500 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. காலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர். இதனிடையே இந்த மாதம் இறுதி வரை பனிப்பொழிவு நிலவ வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story