பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி


பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி:  50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 26 Jan 2021 3:02 PM GMT (Updated: 26 Jan 2021 3:02 PM GMT)

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பெண் விவசாயி பாப்பம்மாள் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கோவை,

நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் அரசால் நேற்று அறிவிக்கப்பட்டன.  இவற்றில், நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

நாட்டின் மிக உயரிய பத்ம பூஷண் விருதுக்கு பல்வேறு துறைகளில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று பத்மஸ்ரீ விருதுக்கு 102 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தின் சார்பில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றவர்களில் பெண் விவசாயி பாப்பம்மாளும் ஒருவர்.  பெருமைமிகு விருதுக்கு தேர்வு பெற்ற விவசாயி பாப்பம்மாளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கோவை தேக்கம்பட்டியில் உள்ள விவசாயி பாப்பம்மாளின் இல்லத்திற்கு செய்தியாளர்கள் நேரில் சென்று அவரை சந்தித்து பேட்டி கண்டனர்.  இதில் அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த 50 வருடங்களாக நான் விவசாயம் செய்து வருகிறேன்.

எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  50 வருடங்களாக விவசாயம் செய்த அனுபவம் எனக்கு உள்ளது.  யாருக்கும் கிடைக்காத விருது எனக்கு கிடைத்து உள்ளது.  என்னை நிறைய பேர் பாராட்டி வருகின்றனர் என கூறியுள்ளார்.

Next Story