20 லட்சம் ரூபாய் சொந்த பணத்தில் கிராம மக்களுக்கு சாலை அமைத்த பஞ்சாயத்து தலைவர்


20 லட்சம் ரூபாய் சொந்த பணத்தில் கிராம மக்களுக்கு சாலை அமைத்த பஞ்சாயத்து தலைவர்
x
தினத்தந்தி 11 Feb 2021 5:30 AM GMT (Updated: 11 Feb 2021 5:30 AM GMT)

ஓசூர் அருகே கிராம மக்களுக்காக தனது சொந்த பணத்தில் நிலம் வாங்கி சாலை அமைத்த பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பொம்மசந்திரம் என்ற கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சாலை வசதி என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது. 

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கீதா சங்கர் என்பவர், இந்த பகுதிக்கு சாலை வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனாலும் கிராமத்திற்கு 1 கி.மீ. தூரம் வரை மற்றவர்களின் பட்டா நிலத்தில் தான் செல்ல வேண்டும் என்பதால் சாலை வசதி செய்ய முடியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற கீதா சங்கர், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிலத்தை தனது சொந்த செலவில் வாங்கி, அந்த கிராமத்திற்கு சாலை அமைத்துள்ளார். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மக்கள் சேவை செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Next Story