“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி: மு.க.ஸ்டாலின், 4-ம் கட்ட பயணம் நாளை தொடக்கம்


“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி: மு.க.ஸ்டாலின், 4-ம் கட்ட பயணம் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2021 3:45 AM GMT (Updated: 16 Feb 2021 2:21 AM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” 4-ம் கட்ட சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் குறைகளைத் தீர்க்கக்கோரி அளித்த மனுக்களைப் பெற்றுவருகிறார். அந்தவகையில் 4-ம் கட்டமாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் 17-ந் தேதி (நாளை) தொடங்குகிறார்.

நாளை தொடங்குகிறார்

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

4-ம் கட்டமாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரசார நிகழ்ச்சியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 17-ந் தேதி தொடங்குகிறார். 17-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு, மதுரை வடக்கு, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை ஒத்தகடை யானை மலையிலும், 18-ந் தேதி காலை 8 மணிக்கு தேனி வடக்கு, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கம்பம் உத்தமபாளையம் பேரூர் கோகிலாபுரம் விளக்கு பகுதியிலும் நடக்கும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

கோவை-திருப்பூர்

19-ந் தேதி காலை 8 மணிக்கு, கோவை மாநகர் கிழக்கு, மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவை சிங்காநல்லூர், மதியம் 1 மணிக்கு கோவை வடக்கு, நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் காரமடை அருகேயும், 20-ந் தேதி காலை 8 மணிக்கு கோவை கிழக்கு, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியிலும், மதியம் 1 மணிக்கு திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம் தேன்மலர் பள்ளி அருகேயும், 21-ந் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் வடக்கு, மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர் ராக்கிபாளையம் பிரிவு காங்கேயம் சாலையிலும்,

மதியம் 1 மணிக்கு ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்துறை கடப்பமடை கலைஞர் திடலிலும், 22-ந் தேதி காலை 8 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அந்தியூர் சத்தி-அத்தாணிி சாலையிலும், மதியம் 1 மணிக்கு சேலம் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டூர் ஓலைப்பட்டி ஊராட்சியிலும் நடைபெறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story