இன்று மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை


இன்று மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை
x
தினத்தந்தி 20 Feb 2021 1:32 AM GMT (Updated: 20 Feb 2021 1:32 AM GMT)

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து 92.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. 

அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 92.59 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து 85.98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

Next Story